Tuesday, 1 February 2011

தாய்த் தமிழகத்தில் ஆவி ஆராய்ச்சி!

1973 இல் செத்த பெரியார் 1977 இல் எப்படி நாற்காலியில் வந்தார்?

(ஆவிகளை நம்புவது பகுத்தறிவு ஆகாது)

சீமான் ‘உருவாக்கும்’ புதிய வரலாறு
[ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 09:47.23 AM GMT +05:30 ]
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கூட்டமொன்றில் இயக்குநர் சீமான் ஆற்றிய உரையில் தவறான வரலாற்றுத்தகவலை கூறியுள்ளதாக பேராசிரியர் சுப,வீரபாண்டியன் தனது இதழில் தெரிவித்துள்ளார்.

"எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள். "

- சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010,சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரை.

எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தந்தை பெரியார் அவர்களோ 1973 ஆம் ஆண்டு இறுதியில் இறந்து போய் விட்டார். தான் முதல்வர் ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய்விட்ட பெரியாரைச் சக்கர நாற்காலியில் வைத்து எம்.ஜி.ஆர் எப்படி மேடைக்கு அழைத்து வந்திருக்க முடியும் என்பது நமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

--சுப.வீரபாண்டியன்,
நன்றி: கருஞ்சட்டைத்தமிழர், 16.01.2011

எகிப்தில் திருவிழா





அமெரிக்க அடிவருடி, இஸ்ரேலிய கைக்கூலி எகிப்திய மக்கள் விரோத முபாரக் பாசிச ஆட்சி ஒழிக!
எகிப்தில் ஆட்சி மாற்றத்துக்கான வெகுஜன மக்களின் தன்னியல்பான கிளர்ச்சி வெல்க!

முபாரக் அரசே,
ஆட்சி மாற்றத்துக்காகப் போராடும் எகிப்திய வெகுஜன மக்கள் இயக்கத்தின் மேல் அரச வன்முறையைப் பிரயோகிக்காதே!
போராடும் பொதுமக்களின் சொத்துக்களைச் சூறையாட பொலிஸ் குண்டர்களைப் பயன்படுத்தாதே!
Internet, Mobile Phone பாவனைக்கு விதித்துள்ள தடையை உடனே நீக்கு!
அல் ஜசீரா தொலைக்காட்சி மீது விதித்துள்ள தடையை நீக்கு!

ஒபாமாவின் அமெரிக்காவே,
எகிப்திய மக்கள் விரோத முபாரக் அரசுக்கு வழங்கும் அனைத்து ஆதரவையும் உடனே நிறுத்து!
முபாரக்கை திரை மறைவில் வைத்து பழைய ஆட்சியை புதிய முகங்களில் நடத்தும் சதித்திட்டத்தைக் கைவிடு!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே
எகிப்தில் ஆட்சி மாற்றத்துக்கான வெகுஜன மக்களின் தன்னியல்பான கிளர்ச்சி வெற்றி அடைய ஆதரவளியுங்கள்!
எகிப்திய உழைக்கும் மக்களின் விடுதலை. ஆட்சி மாற்றாத்தால் அல்ல அரசு மாற்றத்தாலேயே நிறைவேறும் என்பதை நினைவில் வையுங்கள்!
ஏகாதிபத்திய காலனியாதிக்கம் மத்திய கிழக்கில் படிப்படியாக தகர்ந்து வருவதை கண்டு புரட்சியில் நம்பிக்கை பெறுங்கள்!
========= புதிய ஈழப்புரட்சியாளர்கள் =============